sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆலடிதோப்பு விநாயகருக்கு வரும் 15ல் கும்பாபிஷேகம்

/

ஆலடிதோப்பு விநாயகருக்கு வரும் 15ல் கும்பாபிஷேகம்

ஆலடிதோப்பு விநாயகருக்கு வரும் 15ல் கும்பாபிஷேகம்

ஆலடிதோப்பு விநாயகருக்கு வரும் 15ல் கும்பாபிஷேகம்


ADDED : டிச 10, 2024 07:59 PM

Google News

ADDED : டிச 10, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபரம் ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவில், பழமையான வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதிவாசிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை மறுநாள் காலை 6:00 மணிக்கு பந்தக்கால் நடும் நிகழ்வும், 14ம் தேதி இரவு 7:00 மணிக்கு, புதிதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அஷ்டபந்தனம் சாற்றப்பட உள்ளது.

வரும் 15ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி ஹோமம் உள்ளிட்டவையும், காலை 9:45 மணிக்கு வேதவிற்பன்னர்கள் கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கின்றனர்.

காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், தீபாரானையும் நடைபெறுகிறது. காலை 11:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாட்டை ஆலடி பிள்ளையார் கோவில் தோப்பு தெருவாசிகள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us