/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நவ.,10ல் கும்பாபிஷேகம்
/
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நவ.,10ல் கும்பாபிஷேகம்
ADDED : நவ 04, 2025 10:16 PM
ஸ்ரீபெரும்புதுார்: போந்துார் கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஜலகண்டேஸ்வரர் சுவாமி கோவிலில், வரும் நவ.,10ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத ஜலகண்டேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நவ., 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, 8ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், கோ பூஜைகளுடன், முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
வரும் 9ம் தேதி, விசேஷ சாந்தி, விக்னேஸ்வர் பூஜை நடக்க உள்ளது. 10ம் தேதி காலை 9:00 -மணிக்கு, கலசங்களில் புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.
வரும் 11ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் துவங்குகிறது.

