/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கும்பாபிஷேக பத்திரிகையில் தி.மு.க., நிர்வாகிகள் பெயர் காஞ்சி பக்தர்கள் அதிருப்தி

ADDED : அக் 19, 2024 02:02 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் கிழக்கு ராஜவீதியில் உள்ளது நகரீஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கான திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
திருப்பணிகள் முடிந்த நிலையில், வரும் 21ம் தேதி, இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் மேலாளர் வஜ்ஜிரவேலு மற்றும் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் பெயரில், அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளன.
அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டிய இந்த அழைப்பிதழில், தி.மு.க., நிர்வாகிகள் பெயரும் இடம் பெற்றிருப்பது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகர தி.மு.க., செயலர் தமிழ்ச்செல்வன், 1வது பகுதி செயலர் திலகர், 18வது வட்ட செயலர் சம்பத் ஆகிய மூன்று தி.மு.க., நிர்வாகிகள் பெயர் இடம் பெற்றுள்ளது.
அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்கள், விதிமுறைப்படி அச்சடிக்கப்பட வேண்டும். ஆனால், தி.மு.க., நிர்வாகிகள் பெயரையும் சேர்த்து அச்சடித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.