/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புரம்: புகார் பெட்டி;குப்பை அகற்றுவதில் அலட்சியம்
/
காஞ்சி புரம்: புகார் பெட்டி;குப்பை அகற்றுவதில் அலட்சியம்
காஞ்சி புரம்: புகார் பெட்டி;குப்பை அகற்றுவதில் அலட்சியம்
காஞ்சி புரம்: புகார் பெட்டி;குப்பை அகற்றுவதில் அலட்சியம்
ADDED : பிப் 08, 2024 12:00 AM

குப்பை அகற்றுவதில் அலட்சியம்
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம்,
வெங்காடு ஊராட்சி, வினாயகர் கோவில் தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில்
குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு, குப்பை அள்ளும் போது,
தொட்டியை முறையாக கையாள்வதில்லை, குப்பை தொட்டியில் இருந்து குப்பையை
அகற்றி பின், தொட்டியை கால்வாயில் தலைக்குப்புற கவிழ்த்துவிட்டு
செல்கின்றனர்.
இதனால், குப்பை தெருக்கள் மற்றும் மழைநீர் கால்வாயில்
கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், நோய்தொற்று
ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, அந்த இடத்தில் குப்பை தொட்டியை முறையாக பராமரித்து, குப்பை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நா. தர்மராஜ், வெங்காடு.
பழுதடைந்த மஞ்சப்பை இயந்திரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரசாத கடை அருகில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.
இந்த இயந்திரத்தில், ௧௦ ரூபாய் நாணயம் அல்லது நோட்டு செலுத்தினால், பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கும். இயந்திரம் அமைத்த ஒரு மாதத்திலேயே பழுதடைந்துவிட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், இயந்திரம் பழுதடைந்துள்ளது என்ற விபரம் அறியாமல், இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டுகளை செலுத்துகின்றனர்.
பின், மஞ்சப்பை வராததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார், காஞ்சிபுரம்.

