/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்

ADDED : பிப் 19, 2024 10:47 PM
அரசு பள்ளிகள் அருகே மீண்டும் வேகத்தடை வேண்டும்
காஞ்சிபுரம் அடுத்த, ஏகனாம்பேட்டை மற்றும் நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் கருக்குப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டும்.
மாணவ - மாணவியருக்கு சவுகரியமாக ஏகனாம்பேட்டை பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்க பணிகளில், வேகத்தடை அகற்றப்பட்டது.
அதன் பின், மீண்டும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஏகனாம்பேட்டை அருகே மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- பி.பால்ராஜ், வில்லிவலம்.