/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டமைப்பு வசதி கட்டணம் சென்னையில் ஏப்., 1 முதல் உயர்வு
/
கட்டமைப்பு வசதி கட்டணம் சென்னையில் ஏப்., 1 முதல் உயர்வு
கட்டமைப்பு வசதி கட்டணம் சென்னையில் ஏப்., 1 முதல் உயர்வு
கட்டமைப்பு வசதி கட்டணம் சென்னையில் ஏப்., 1 முதல் உயர்வு
ADDED : மார் 20, 2024 10:17 PM
சென்னை:சென்னை பெருநகரில் புதிய கட்டுமான திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கான கட்டணம், 10.7 சதுர அடிக்கு, 264 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
நகர், ஊரமைப்பு சட்டப்படி கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர், அதற்காக முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இதற்காக, நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும்.
இந்த வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்திற்கு, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலுக்கான பொது வசதிகளை மேம்படுத்த, இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணம் ஆண்டு வாரியாக திருத்தி அமைக்கப்படுவது வழக்கம்.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, ஏப்., 1ல் அமலுக்கு வரும்.
இந்த வகையில், வரும் நிதியாண்டிற்கான புதிய கட்டணங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன.
இதன்படி, சென்னை பெருநகரில் புதிய கட்டடங்களுக்கு, 10.7 சதுர அடிக்கு, 264 ரூபாய் புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நிதியாண்டு நிலவரப்படி இந்த கட்டணம், 10.7 சதுர அடிக்கு, 240 ரூபாயாக இருந்தது. புதிய கட்டண விபரங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், சி.எம்.டி.ஏ.,வுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.

