/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் பஸ் நிலைய கால்வாயில் கொட்டும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

ADDED : டிச 28, 2024 08:19 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேருந்து நிலையத்திற்குள் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒட்டி, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய், வாலாஜாபாத் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே துவங்கி, பேருந்து நிலையம் வழியாக மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே கால்வாயில் கலக்கிறது.
இந்நிலையில், பேருந்து நிலையத்திற்குள் கடைகளை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி, சில இடங்களில் திறந்தநிலையில் மூடி இல்லாமல் காணப்படுகிறது. மூடி இல்லாத திறந்தவெளி பகுதிகளில், பேருந்து நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள் சிலர், பல்வேறு கழிவுகளையும், கழிவுநீரையும் கொட்டி வருகின்றனர்.
ஏற்கனவே கால்வாயில் அடைப்புகள் உள்ள நிலையில், இக்கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தின் உள்பகுதி கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கவும், கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.