/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலால் உதவி கமிஷனர் பணியிடம் காலி மதுபான நடவடிக்கைகளில் சுணக்கம்
/
கலால் உதவி கமிஷனர் பணியிடம் காலி மதுபான நடவடிக்கைகளில் சுணக்கம்
கலால் உதவி கமிஷனர் பணியிடம் காலி மதுபான நடவடிக்கைகளில் சுணக்கம்
கலால் உதவி கமிஷனர் பணியிடம் காலி மதுபான நடவடிக்கைகளில் சுணக்கம்
ADDED : அக் 03, 2024 07:47 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலால் பிரிவு உதவி கமிஷனர் பணியிடம், நான்கு மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது.
இப்பணிக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி சீனிவாசன் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். கலால் பிரிவுக்கு ரெகுலர் அதிகாரி நியமிக்காததால், கலால் பணிகள் சுணக்கம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கலால் உதவி கமிஷனர் சட்டவிரோத மதுபான கடத்தல், அனுமதியற்ற மதுபான கூடங்கள் ஆகியவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், இப்பணியிடம் காலியாக இருப்பதால், மதுபான விவகாரங்களில் நடவடிக்கைகள் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுகிறது. வருவாய் துறை மேலிடம், கலால் உதவி கமிஷனர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என, அத்துறை ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.