/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
திறந்தநிலை மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 11, 2024 11:31 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போளூர், வந்தவாசி, சென்னை ஆகிய பகுதிகளிலிருந்தும், பேருந்துகள் வந்து செல்கின்றன. இப்பேருந்து நிலையத்தால், தினமும், 2,000க்கும் மேற்பட்ட பயணியர் போக்குவரத்து சேவை பெறுகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. வடக்கே உள்ள நுழைவாயில் அருகே, மழைநீர் வடிகால்வாய் திறந்தநிலையில் உள்ளது.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர், கால்வாயில் தவறி விழுந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீரும் கலந்து வருவதால், அப்பகுதியில் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேருந்து நிலைய நுழைவாயில் அருகே உள்ள திறந்தநிலை வடிகால்வாயை சீரமைக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

