/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எலைட் டாஸ்மாக் கடை ஊழியர் தலைமறைவு
/
எலைட் டாஸ்மாக் கடை ஊழியர் தலைமறைவு
ADDED : டிச 28, 2024 09:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில், செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார் பகுதியில், 4601 என்ற கடை எண் கொண்ட வெளிநாடு மது விற்பனை செய்யும் ‛எலைட்' டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இங்கு, தினமும் 20 லட்சம் ரூபாய் வரை மதுபாட்டில்கள் விற்பனையாகின்றன. கடந்த 25ம் தேதி இரவு காஞ்சிபுரம் மண்டல டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு சென்றனர்.
அப்போது, விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்கள், மது விற்பனை செய்து, 1.37 கோடி ரூபாய் வங்கிக்கு செலுத்தவில்லை என, தெரிய வந்தது.
தற்போது, எலைட் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தலைமறைவாகி உள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் தனிப்படையினர், அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

