/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகத்தடை மீது வர்ணம் இல்லாததால் ஏனாத்துார் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

ADDED : பிப் 13, 2024 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் - தென்னேரி சாலையில், ஏனாத்துார் காலனி அருகே, தாமரை குளம் உள்ளது. இதன் அருகே, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதான சாலையில் உள்ள வேகத்தடை, வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் வர்ணம் பூசப்படாமல் இருக்கிறது. இதனால், தென்னேரி, மருதம், கரூர், கவுரியம்மன் பேட்டை வாகன ஓட்டிகள், ஏனாத்துார் செல்லும் போது, நிலை தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.
எனவே, ஏனாத்துார் வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் மற்றும் ஒளிரும் பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.