/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டாக்டர் கலாம் நகரானது தேவரியம்பாக்கம் காலனி
/
டாக்டர் கலாம் நகரானது தேவரியம்பாக்கம் காலனி
ADDED : ஏப் 30, 2025 06:32 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், 1,300க்கும் மேற்பட்ட துணை கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு துணை கிராமத்திற்கும் ஒரு பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இதில், பட்டியல் இனத்தைச்சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, காலனி என, அழைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் ஸ்டாலின் ஊராட்சிகளில் காலனி என்ற பெயர்களை நீக்கம் செய்யப்படும் என, தெரிவித்தார்.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் தேவரியம்பாக்கம் காலனி என அழைக்கப்பட்டு வந்தது. ‛டாக்டர் கலாம் நகர்' என, அழைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் எம்.டி.அஜய்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், காலனி என்ற வார்த்தை நீக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். அதை ஊராட்சி நிர்வாங்கள் சார்பில் வரவேற்கிறோம். எங்கள் ஊராட்சியில், காலனி என்ற வார்த்தை இருக்க கூடாது என, 2013ல் நடந்த கிராமசபையில் தீர்மானம் இயற்றி, நிறைவேற்றி உள்ளோம். தற்போது காலனி பெயரை நீக்கி டாக்டர் கலாம் நகர் என மாற்றியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

