/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவில் சுற்றுச்சுவர் அருகே 3 புத்தர் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு
/
ஏகாம்பரநாதர் கோவில் சுற்றுச்சுவர் அருகே 3 புத்தர் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு
ஏகாம்பரநாதர் கோவில் சுற்றுச்சுவர் அருகே 3 புத்தர் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு
ஏகாம்பரநாதர் கோவில் சுற்றுச்சுவர் அருகே 3 புத்தர் புடைப்பு சிற்பம் கண்டெடுப்பு
ADDED : பிப் 02, 2024 11:47 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தெற்கு சுற்றுச்சுவர் பகுதியில், பல ஆண்டுகளாக வீட்டின்கட்டுமானத்திற்குள் புதைந்திருந்த மூன்று அடர்ந்த நிலை புத்தர் புடைப்பு சிற்பங்களை தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வு சங்க செயலரும், வரலாற்று ஆர்வலருமான ராதா பாலன் என்கிறரூத் கூறியதாவது:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தின் அருகே, பழைய வீட்டின் கட்டுமானம் இருந்தது. சமீபத்தில், அந்த கட்டுமானம் அகற்றப்பட்டபோது, அங்கு பவுத்த சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தோம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சுற்றுச்சுவரானது, சிதிலமடைந்திருந்த புத்த விஹாரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற எச்சங்களை கொண்டு 1509ல் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது.
தொடர்ந்து, 1799ல் ஆங்கில ஆட்சியர் ஹட்சன் என்பவரால் மீண்டும்சுற்றுச்சுவர் புனரமைக்கப்பட்டு, மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது.
இதுவரை ஏகாம்பரநாதர்கோவிலில் ஆய்வாளர்கள் ராஜகோபுரத்தை ஒட்டி உள்ள பாதையில் வடக்கு சுவர் பகுதியில், புத்தரின்ஏழு புடைப்பு சிற்பங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
இதுதவிர சில ஆண்டுகளுக்கு முன், கோவிலின்சுற்றுச்சுவரிலிருந்து மாயமான தமிழகத்தின் ஒரே பரிநிர்வாண புத்தர் சிற்பமும் சேர்த்து கணக்கிட்டால் எட்டு சிற்பங்கள் ஆகும்.
வீட்டு கட்டுமான அமைப்பில் புத்தரின் சிற்பங்கள் மூன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஒரு சிற்பம் மட்டுமே நம் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மீதமுள்ள இரண்டு சிற்பங்கள், சிமென்ட் கொண்டு மூடியுள்ள நிலையில் அவற்றை மீட்க இயலவில்லை.
இந்த மூன்று சிற்ப தொகுதிகளுடன் சேர்த்து, இதுவரை 11 புத்தர் சிற்பங்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

