
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தடுப்பில்லாத சாலையோர பள்ளம்
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் இருந்து, செவிலிமேடு புறவழி பிரதான சாலையுடன் இணையும், இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையோரம் விவசாய தரிசு நிலம் உள்ள பகுதி பள்ளமாக உள்ளது.
அப்பகுதியில் சாலை தடுப்பு இல்லாததால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சாலையோரம், இரும்பு தடுப்பு அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.

