/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிமென்ட் கழிவு கொட்டுவதால் மரக்கன்றுகள் அழியும் அபாயம்
/
சிமென்ட் கழிவு கொட்டுவதால் மரக்கன்றுகள் அழியும் அபாயம்
சிமென்ட் கழிவு கொட்டுவதால் மரக்கன்றுகள் அழியும் அபாயம்
சிமென்ட் கழிவு கொட்டுவதால் மரக்கன்றுகள் அழியும் அபாயம்
ADDED : டிச 20, 2025 05:31 AM

காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, சிமென்ட் ஜல்லிக்கழிவுகளை பிரதான சாலை ஓரம் கொட்டுவதால், மரக்கன்றுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில் இருந்து, மருதம் கிராமம் வழியாக, தென்னேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஓரம், ஏனாத்துார், கரூர், மருதம், சின்னிவாக்கம் ஆகிய ஊராட்சி நிர்வாகங்களின் சார்பில், மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.
மரக்கன்றுகள் வளரத் துவங்கியுள்ளன. இந்த கன்றுகள் மீது, தனியார் தொழிற்சாலைகளின் கட்டுமான லாரிகளில் இருந்து சிமென்ட் ஜல்லிக்கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். ஏனாத்துார்-தென்னேரி சாலையில், கரூர், புத்தகரம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் ஜல்லிக்கழிவு கொட்டிசெல்வது வாடிக்கையான செயலாக உள்ளது.
இதனால், ஊட்டத்துடன் வளர வேண்டிய செடிகள் சிமென்ட் கழிவுகளால் அழிய நேரிடுகிறது. இதை கண்காணிக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகங்களும், எந்த நிறுவனங்களின் கழிவு கொட்டப்படுகிறது என, தெரியாமல் திணறி வருகின்றனர். எனவே, சாலை ஓரம் சிமென்ட் ஜல்லிக்கழிவு கொட்டும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

