/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அரசியல்வாதிகளுக்கு அறிவுரை'
/
'தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அரசியல்வாதிகளுக்கு அறிவுரை'
'தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அரசியல்வாதிகளுக்கு அறிவுரை'
'தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அரசியல்வாதிகளுக்கு அறிவுரை'
ADDED : மார் 19, 2024 03:27 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றிய விளக்கக் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
இதில், வாக்காளர்கள் விபரம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியவை, வாகன அனுமதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய கையேடு, கட்சியினருக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 'பொதுக்கூட்ட அனுமதி கேட்பது, வாகன அனுமதி உள்ளிட்டவை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்' எனவும், 'நகர்ப்புறங்களில், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது; வழிபாட்டு தலங்கள் அருகே பிரசாரம் செய்யக்கூடாது' என பல்வேறு விதிமுறைகளை கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதற்கு, 'பொதுக்கூட்டங்கள் நடத்த கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், பல்வேறு இடங்களில் கட்சியினரின் கொடி பறக்கிறது; ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது விரைவாக அனுமதி வழங்க வேண்டும்; ஆன்லைன் சர்வர் பிரச்னை வந்தால், மேனுவலாக அனுமதி வழங்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்கூட்டத்தின் இடையே, கொடி கம்பங்களில் பறக்கும் கொடிகளை இறக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கூறும்போது, கட்சி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

