/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடல்மங்கலத்தில் பழுதான ரேஷன் கடை மாற்றப்படுமா?
/
கடல்மங்கலத்தில் பழுதான ரேஷன் கடை மாற்றப்படுமா?
ADDED : ஏப் 23, 2024 04:22 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடல்மங்கலம் கிராமம். இங்கு, பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ரேஷன் கடையில், 380 குடும்ப அட்டைதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர்.
இந்த ரேஷன் கடை, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து, மழை நேரங்களில் தளத்தின் வழியாக மழை நீர் ஒழுகுகிறது.
இதனால், மழைக்காலங்களில், ரேஷன் கடையில் இருப்பு உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
கடைக்குள் மழை நேரங்களில் நீர் ஒழுகுவதை தவிர்க்க தளத்தின் மேல் தார்ப்பாய் போர்த்தப்பட்டுள்ளது.
எனவே, கடல்மங்கலம் கிராமத்தில், ரேஷன் கடைக்கான கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

