/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொடர் திருட்டை தடுக்க துண்டு பிரசுரம் வினியோம்
/
தொடர் திருட்டை தடுக்க துண்டு பிரசுரம் வினியோம்
ADDED : மே 24, 2024 11:21 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல்துறையினர் சார்பில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடுகள்தோறும் துண்டு பிரசுரம் அச்சிட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 4 மாதங்களாக உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.
எனவே, மக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு ஊருக்கு சென்றால், நீங்கள் திரும்ப வருவதற்கு எத்தனை நாட்களாகும் என்ற தகவலையும், உங்களுடைய முகவரியையும் அவசியம் காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
தங்களது உடைமைகளை பாதுகாக்க காவல்துறை அறிவுரையை பின்பற்றி ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மொபைல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

