/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூழமந்தல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் பெருவிழா துவக்கம்
/
கூழமந்தல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் பெருவிழா துவக்கம்
கூழமந்தல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் பெருவிழா துவக்கம்
கூழமந்தல் பெருமாள் கோவிலில் வரும் 21ல் பெருவிழா துவக்கம்
ADDED : செப் 17, 2024 08:42 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, கூழமந்தல் கிராமத்தில் பேசும் பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசியில் வரும் சனிக்கிழமையில் புரட்டாசி மாத பெருவிழா நடைபெறுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா, வரும் 21ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை திருமஞ்சனம் நடக்கிறது. சனிக்கிழமையில் சொற்பொழிவு, சிறப்பு அலங்கார தரிசனம், வீதியுலா, பஜனை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.
இதில், முதல்வார சனிக்கிழமையான வரும் 21ம் தேதி, இரவு கீழ்நெல்லி கங்கையம்மன் நாடக மன்றத்தினரின் நாடகமும், இரண்டாவது வாரமான வரும் 28ம் தேதி இரவு ஆரணி பத்மா நாடக மன்றத்தினரின் நாடகமும், மூன்றாவது வாரமான அக்., 5ம் தேதி இரவு ஆரணி வெற்றி நாடக மன்றத்தினரின் நாடகமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கூழமந்தல் கிராமத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.

