/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரைப்பாலம் ஓரத்தில் விரிசல் ஓராண்டுகூட தாக்குபிடிக்கவில்லை
/
தரைப்பாலம் ஓரத்தில் விரிசல் ஓராண்டுகூட தாக்குபிடிக்கவில்லை
தரைப்பாலம் ஓரத்தில் விரிசல் ஓராண்டுகூட தாக்குபிடிக்கவில்லை
தரைப்பாலம் ஓரத்தில் விரிசல் ஓராண்டுகூட தாக்குபிடிக்கவில்லை
ADDED : ஏப் 20, 2024 12:19 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் - பொன்னேரிக்கரை வரையில், 8.2 கி.மீ., துாரம் உள்ளது.
இந்த சாலை, 5 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு ஆண்டு, 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 1.5 மீட்டர் கூடுதலாக விரிவுபடுத்தி, 7 மீ்ட்டர் அகல அளவிற்கு சாலை விரிவுப்படுத்த உள்ளது.
இதில், 14 இடங்களில் தரைப்பாலங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவாக்கம் அருகே இருக்கும் தரைப்பாலத்தின் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், தரைப்பாலங்களின் இருபுறமும் தார்சாலை பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் நிலை தடுமாறி செல்லும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கவிழும்அபாயம் உள்ளது.
எனவே, தரைப்பாலத்தின் விரிசல் மற்றும் தரைப்பாலம் இரு தார்சாலை செப்பணிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.