/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்டேஷனில் இறந்த ரவுடி உடல் 8 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு
/
ஸ்டேஷனில் இறந்த ரவுடி உடல் 8 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு
ஸ்டேஷனில் இறந்த ரவுடி உடல் 8 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு
ஸ்டேஷனில் இறந்த ரவுடி உடல் 8 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு
ADDED : ஏப் 22, 2024 04:37 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில், கடந்த 13ம் தேதி, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, பா.ஜ., நிர்வாகி சங்கர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி சாந்தகுமார், 30, என்பவர், அங்கேயே திடீரென உயிரிழந்தார்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், நீதித்துறை நடுவர் முன் பிரேத பரிசோதனை முடிந்தும், ரவுடி சாந்தகுமார் உடலை வாங்க, உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தியகுடியரசு கட்சியின் மாநில தலைவர் சூசை, ஆவடி காவல் ஆணையரகத்தில் நடத்திய பேச்சு முடிவில், எட்டு நாட்களுக்குப் பின், சாந்தகுமார் உடலை வாங்க, உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை 10:30 மணிக்கு, உறவினர்களிடம் சாந்தகுமார் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கை, திருவள்ளூர் நீதிமன்ற நடுவர் பவித்ரா விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

