/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பிரதான சாலைகளில் வேகம் குறைக்க தற்காலிக தடுப்பு
/
காஞ்சியில் பிரதான சாலைகளில் வேகம் குறைக்க தற்காலிக தடுப்பு
காஞ்சியில் பிரதான சாலைகளில் வேகம் குறைக்க தற்காலிக தடுப்பு
காஞ்சியில் பிரதான சாலைகளில் வேகம் குறைக்க தற்காலிக தடுப்பு
ADDED : ஏப் 04, 2024 12:00 AM

காஞ்சிபுரம், ஏசெங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
முதலில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் வரையில், 41 கி.மீ., துாரத்திற்கு, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இது, 70 சதவீதபணிகள் நிறைவடைந்து உள்ளன.
தார் சாலைகள் போடும் பணி நிறைவு பெற்றிருப்பதால், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இந்த வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஆங்காங்கே வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகைகளை நெடுஞ்சாலைத் துறையினர் இன்னுமும் அமைக்கவில்லை.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், சாலை இருபுறமும் தற்காலிகமாக பேரல் அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க ஏற்பாடு செய்து உள்ளனர். குறிப்பாக, அய்யன்பேட்டை, கருக்குப்பேட்டை, ஏகனாம்பேட்டை, தாங்கி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், வாகன வேகம் குறைக்கும் வகையில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
இதன் மூலமாக, அதிவேகமாக செல்லும் வாகனங்களின் விபத்து தவிர்க்கப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

