/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரமடத்தில் தமிழ் புத்தாண்டு விஜயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி
/
சங்கரமடத்தில் தமிழ் புத்தாண்டு விஜயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி
சங்கரமடத்தில் தமிழ் புத்தாண்டு விஜயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி
சங்கரமடத்தில் தமிழ் புத்தாண்டு விஜயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி
ADDED : ஏப் 15, 2024 04:45 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சங்கர மடத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பிருந்தாவனத்தில் தீபாராதனை மற்றும் மலர் தூவி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
புத்தாண்டையொட்டி பிருந்தாவனத்தின் முன் விஷுக்கனி தரிசனம் நடந்தது. தொடர்ந்து, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு புதிய ரூபாய் நாணயங்களை வழங்கி ஆசிர்வதித்தார்.
திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.