ADDED : ஏப் 04, 2024 09:53 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தலையொட்டி, செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், செங்கல்பட்டில் 131, திருப்போரூரில் 80, செய்யூர் - தனி 46, மதுராந்தகம் - தனி 41 என, மொத்தம் 298 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லுாரில் 283, பல்லாவரத்தில் 89, தாம்பரத்தில் 85 என, 457 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுஉள்ளன.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகளை, தேர்தல் காவல் பார்வையாளர் பரத்ரெட்டி பொம்மரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

