/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கணினி இல்லாத அரசு பள்ளி காஞ்சியில் மாணவர்கள் அவதி
/
கணினி இல்லாத அரசு பள்ளி காஞ்சியில் மாணவர்கள் அவதி
ADDED : ஆக 11, 2024 02:40 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 320 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கணினி பிரிவு பயிலும், 90க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாட பயிற்சி அளிக்க, ஆறுகணினிகள் உள்ளன.
இதில், நான்கு கணினிகள் பழுதடைந்தன. மீதமுள்ள இரு கணினிகளில், பள்ளி அலுவலக அறையில் ஒன்றும், மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒன்றும் பயன்படுகிறது. இதனால், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, ஒரேயொரு கணினி வாயிலாக பாடம் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் கணினிகள் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

