/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
25 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு நடவடிக்கை பாயும் என எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : ஏப் 04, 2024 09:53 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தேர்தல் விதிமுறைகள் மற்றும் அவற்றை பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி அரசியல் கட்சியினருக்கு தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஏற்கனவே விரிவாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் தேர்தல் விதிமீறல் தொடர்ந்து நடந்தபடி உள்ளது.
தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக, இதுவரை 25 வழக்குகள் பதிவாகி இருப்பதாக, எஸ்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வினர் மீது ஏழு வழக்குகளும், அ.தி.மு.க.,வினர் மீது ஐந்து வழக்குகள், பா.ம.க., மீது மூன்று வழக்குகளும், நாம் தமிழர் மீது இரண்டு வழக்குகளும், காங்., - தே.மு.தி.க., - பா.ஜ., ஆகிய கட்சிகள் மீது தலா, ஒரு வழக்கு மற்றும் பிற கட்சியினர் மீது மூன்று வழக்குகள் என 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., சண்முகம் எச்சரித்துள்ளார்.