/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தகவல் அளிக்க மறுத்த சார் - பதிவாளர் ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவு
/
தகவல் அளிக்க மறுத்த சார் - பதிவாளர் ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவு
தகவல் அளிக்க மறுத்த சார் - பதிவாளர் ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவு
தகவல் அளிக்க மறுத்த சார் - பதிவாளர் ரூ.15,000 இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஏப் 08, 2024 04:17 AM
திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றம், மங்கலத்தைச் சேர்ந்தவர் சரவணன். திருக்கழுக்குன்றம் சார் -- பதிவாளர் அலுவலகத்தில், அவரது சொத்தை பதிவு செய்தார். புல எண் பதிவில் பிழை ஏற்பட்டதால், திருத்தம் செய்யக்கோரி மனு அளித்தார்.
அதற்கு தனி கட்டணம் செலுத்துமாறு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அலுவலர்கள் செய்த பிழைக்கு, தாம் கட்டணம் செலுத்த இயலாது என, சரவணன் மறுத்து விட்டார். அதனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 6(1)ம் பிரிவின்கீழ், பொது தகவல் அலுவலரான சார் - பதிவாளரிடம், 2022 ஆக., 11ம் தேதி மனு வாயிலாக விபரம் கேட்டுள்ளார்.
அவர் பதில் அளிக்காத நிலையில், 19(1)ம் பிரிவின்கீழ், மேல் முறையீட்டு அலுவலருக்கு, அதே ஆண்டு, செப்., 23ம் தேதி மனு வாயிலாக, விபரம் கேட்டுள்ளார்.
அதற்கும் பதில் கிடைக்காததால், 19(3)ம் பிரிவின்கீழ், அதே ஆண்டு, நவ., 12ம் தேதி, இரண்டாம் மேல்முறையீடு மனு அளித்துள்ளார்.
தமிழ்நாடு தகவல் ஆணையம், 2023 அக்., 16ம் தேதி அம்மனுவை விசாரித்து, செங்கல்பட்டு துணை பதிவுத்துறை தலைவர், ஒரு மாதத்திற்குள் விசாரித்து, தவறு செய்த அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மனுதாரரின் பிரச்னையை தீர்க்க வழிமுறை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டது.
உத்தரவிற்கு பிறகும், தனக்கு தகவல்கள் அளிக்கப்படவில்லை என தெரிவித்து, ஆணைய உத்தரவு நிறைவேற்றப்படாத மனுவை, ஆணையத்திடம் அளித்தார்.
இதையடுத்து, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர், மனுதாரர், துணை பதிவுத்துறை தலைவர், பொது தகவல் அலுவலர் ஆகியோரிடம், கடந்த ஜன., 22ம் தேதி விசாரணை நடத்தினார்.
தவறு செய்த அலுவலர் மீது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்குமாறு, செங்கல்பட்டு மாவட்ட பதிவாளருக்கு, ஜன., 19ம் தேதி, கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளதாக, துணை பதிவுத்துறை தலைவர் தெரிவித்தார்.
மனுதாரர் சார் - பதிவாளர் அலுவலகம் செல்லும்போது, அவரது கோரிக்கையான பிழை திருத்தம் மேற்கொள்வதாகவும், அவர் உறுதி அளித்தார்.
பொது தகவல் அலுவலர், அவரது விளக்க கடிதத்தை ஒப்படைத்தார். நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்த அறிக்கையை, உத்தரவு கிடைத்த 15 வேலை நாட்களுக்குள் அளிக்க ஆணையர் உத்தரவிட்டார்.
ஆணைய உத்தரவிற்கு பிறகும், மனுதாரர் கோரிய தகவலை அளிக்காததால், 19(8)(பி) பிரிவின்படி, மனுதாரருக்கு இழப்பீடாக 15,000 ரூபாயை, உத்தரவு கிடைத்த 15 வேலை நாட்களுக்குள் வழங்கி, அதுகுறித்த அறிக்கையை ஆணையத்திடம் அளிக்கவும், மார்ச் 25ம் தேதி அவர் உத்தரவிட்டார்.

