/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.87 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2.87 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 02, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் அருகே, உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட 2.87 லட்சம்ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட குன்றத்துார், வண்டலுார் -மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலத்தின் கீழ் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குன்றத்துாரில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2.87 லட்சம்ரூபாயை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதுார் உதவி தேர்தல் அலுவலரும், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., சரவணகண்ணனிடம் ஒப்படைத்தனர்.

