/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை
/
லாரி உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 30, 2024 09:16 PM
ஸ்ரீபெரும்புதுார்:மதுராந்தகம் அடுத்த, பவுஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தாவூத், 42, லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மனைவி நுார்ஜகான், 31. தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக, தாவூத், மூன்று ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மேவலுார் குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, கன்டெய்னர் லாரிகளை வைத்து டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்று, காலை 6:00 மணிக்கு, மனைவி நுார்ஜகானுக்கு மொபைல் போனில் தொடர்புக் கொண்டு, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுள்ளார்.
நுார்ஜகான் மறுத்ததால், வீடியோ கால் செய்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறி, மொபைல் போனை துண்டித்துள்ளார்.
இதையடுத்து நுார்ஜகான், தாவூதின் டிரைவர் ராஜேஷுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததன்படி, அறைக்கு சென்று பார்த்த போது, தாவூத் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

