/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் காஞ்சி கலெக்டர் சோதனை
/
ஓட்டு எண்ணும் மையத்தில் காஞ்சி கலெக்டர் சோதனை
ADDED : ஏப் 23, 2024 04:01 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் தொகுதிக்கான லோக்சபா தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. தேர்தலில், 1,932 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவிபேட்' எனும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ஆகியவை, அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில், உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 4ம் தேதி இங்கேயே ஓட்டு எண்ணப்பட உள்ளதால், போலீசார் மட்டுமல்லாமல், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிக்கு, கலெக்டர் கலைச்செல்வி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை சரிபார்த்தார். அதன்பின், கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து, அங்கு பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை கூறினார்.

