/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மிளகர்மேனி தாங்கல் ஏரி துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
/
மிளகர்மேனி தாங்கல் ஏரி துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
மிளகர்மேனி தாங்கல் ஏரி துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
மிளகர்மேனி தாங்கல் ஏரி துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2024 12:09 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்டது மிளகர்மேனி கிராமம். இப்பகுதியில், விவசாய நிலங்களுக்கு மத்தியில் கிராமத்திற்கு சொந்தமான தாங்கல் பகுதி உள்ளது.
மழைக்காலங்களில் இத்தாங்கலில் சேகரமாகும் தண்ணீர், அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரி, கடந்த ஆண்டுகளில் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து வயல் வளர்ந்து காணப்படுகிறது.
இதனால், மழைக்காலங்களில் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை உள்ளது.
எனவே, இந்த தாங்கல் பகுதியை தூர்வாரி தண்ணீர் தேக்கி அத்தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்த வழிவகை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.