/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க பள்ளம் வெட்டி தடுப்பு அமைப்பு
/
ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க பள்ளம் வெட்டி தடுப்பு அமைப்பு
ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க பள்ளம் வெட்டி தடுப்பு அமைப்பு
ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க பள்ளம் வெட்டி தடுப்பு அமைப்பு
ADDED : ஏப் 15, 2024 04:20 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, காரை ஊராட்சியில், சேமந்தாங்கல் ஏரி உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி இருப்பதால், தனியார் தொழிற்சாலையைச் சேர்ந்த சிலர் குப்பையை கொட்டி விட்டு செல்கின்றனர்.
சேமந்தாங்கல் ஏரிக்கரை ஓரம் மது அருந்து, 'குடி'மகன்கள் சிலர், பிளாஸ்டிக் குப்பையை இரவோடு இரவாக எரித்துவிட்டு செல்கின்றனர். இதனால், ஏரி நீர் மாசு ஏற்படுவதோடு, சுற்றுச்சுழலும் பாதிப்படைகிறது.
மேலும், மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகள் பிளஸ்டிக் கழிவுகளை சேர்த்து குடிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, தனியார் தொழிற்சாலை கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது, உள்ளாட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, காரை ஊராட்சி நிர்வாகம், ஏரிக்கு செல்லும் பாதையின் நடுவே முழங்கால் அளவிற்கு பள்ளம் எடுத்து, தடுப்பு ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலமாக, ஏரிக்குள் குப்பை கொட்டுவதை முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

