/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை ஏற்படுத்த கோரிக்கை
/
ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை ஏற்படுத்த கோரிக்கை
ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை ஏற்படுத்த கோரிக்கை
ஆபத்தான சாலை வளைவுகளில் வேகத்தடை ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 09:59 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் இருந்து, கரும்பாக்கம் செல்லும் இணைப்புச் சாலை உள்ளது. அரும்புலியூர் சுற்றுவட்டார கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், அரும்புலியூர் அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. மின்வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
எனவே, ஆபத்தான சாலை வளைவுகளில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க இப்பகுதி வாகன ஒட்டிகள் வலியுறுத்து உள்ளனர்.