/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளால் அபாயம்
/
போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளால் அபாயம்
ADDED : மே 17, 2024 11:32 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் உள்ள இரட்டை மண்டபம் சிக்னல் வழியாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையம், காமாட்சியம்மன் கோவில், கலெக்டர் அலுவலகம், திருத்தணி ஆகிய மார்க்கங்களின் வழியாக செல்லும் வாகனங்கள், சிக்னலில் நின்று செல்கின்றன.
இதில், காஞ்சிபுரம் பேருந்து நிலைய மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சிக்னலில் நின்று செல்லும் போது, சில வாகன ஓட்டிகள் திருத்தணி மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனால், சிக்னல் விழுந்தவுடன் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் நிற்கும் வாகன ஓட்டிகள் மீது மோதும் அபாயம் உள்ளது.
எனவே, இரட்டை மண்டபம் சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

