/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துர்க்கை அம்மன் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்
/
துர்க்கை அம்மன் மீது விழுந்த சூரிய ஒளிக்கதிர்
ADDED : ஏப் 06, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. உத்தராயணமான நாளில், சூரியன் இடம் பெயரும்போது, சூரிய ஒளிக்கதிர்கள் மூலவர் மீது விழும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், நவகிரகங்களின் தலைமை கிரகமான சூரிய பகவான் வடவாயிற்செல்வி என்கிற துர்க்கை அம்மனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெறுவதாக கருதப்படுகிறது.
அதன்படி, நேற்று அதிகாலை சூரிய உதயத்தின் போது, இக்கோவிலின் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் விழுந்தது. துர்க்கை அம்மனுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

