/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
* படம் மட்டும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

ADDED : ஏப் 22, 2024 05:37 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் ரங்கசாமி குளக்கரை மேற்கு பகுதியில், அண்ணா கிளை நுாலகம் இயங்கி வருகிறது. நுாலகம் நுழைவாயில் அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், ஒருவாரமாக சாலையில் வழிந்தோடி வருகிறது.
இதனால், நுாலகத்திற்கு செல்லும் வாசகர்கள் மட்டுமின்றிஅவ்வழியாக பாதாசாரிகள் மூக்கை பிடித்தபடியே கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெறிப்பதால் நடந்து செல்வோரின் ஆடைகளில் கழிவுநீர் தெறிக்கிறது.
இங்கு ஒரு வாரமாக கழிவுநீர் வழிந்தோடுவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ரங்கசாமி குளக்கரை நுாலகம் எதிரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.