/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை
/
கணவருடன் பிரச்னை மனைவி தற்கொலை
ADDED : ஏப் 10, 2025 01:35 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் அடுத்த வாணியந்தலை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சத்யா,26; இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சத்யா தனது குழந்தைகளுடன், பானையங்காலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனவேதனையில் இருந்தவர், நேற்றுமுன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார்.உடன் குடும்பத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சத்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

