/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி
/
கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி
ADDED : செப் 09, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை : கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை அடுத்த மடப்பட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 6:15 மணியளவில் 60; வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.அவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மடப்பட்டு வி.ஏ.ஓ., சவரிநாதன் அளித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.