/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
/
புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது
ADDED : செப் 09, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : பைக்கில் புகையிலை பொருட்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ஆரூர் கிராமத்தில் ரோந்து சென்று, அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த பழையனுாரைச் சேர்ந்த பெரியசாமி மகன் முருகன், 42; விரியூர் சேர்ந்த ராஜாகண்ணன் மகன் ராஜா, 20; இருவர் வைத்திருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
இருவரையும் கைது செய்து, 195 பாக்கெட் ஹான்ஸ், 26 விமல் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.