/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்னல் தாக்கி மின் மாற்றி சேதம்
/
மின்னல் தாக்கி மின் மாற்றி சேதம்
ADDED : அக் 09, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் மின்னல் தாக்கி மின் மாற்றி சேதமடைந்தது.
சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சங்கராபுரம் பூட்டை ரோடில் மின் மாற்றி மின்னல் தாக்கி சேதமடைந்தது.
இதனால், பூட்டை ரோடில் மின்சாரம் துண்டிக் கப்பட்டது. நேற்று முன் தினம் மாலை முதல் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் புதிதாக மின் மாற்றி பொருத்தும் பணியில் நேற்று மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

