/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கழிவுநீர் தேங்கும் பிரச்னை உண்ணாவிரத போராட்டம்
/
கழிவுநீர் தேங்கும் பிரச்னை உண்ணாவிரத போராட்டம்
ADDED : பிப் 20, 2024 11:29 PM
கள்ளக்குறிச்சி : கடுவனுாரில் கால்வாயில் கழிவு தேங்குவதை சரிசெய்யாததை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறி இரண்டு பேர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
வாணாபுரம் தாலுகா, கடுவனுார் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி, குலசேகரஆழ்வார் ஆகிய இருவரும் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
கடுவனுார் புதுக்காலனி தெற்கு மற்றும் மேற்கு தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. தேங்கியுள்ள கழிவுநீரினை சரிசெய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்காத பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 26ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

