/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணையாற்றில் கற்சிலைகள்: திருக்கோவிலுார் அருகே பரபரப்பு
/
பெண்ணையாற்றில் கற்சிலைகள்: திருக்கோவிலுார் அருகே பரபரப்பு
பெண்ணையாற்றில் கற்சிலைகள்: திருக்கோவிலுார் அருகே பரபரப்பு
பெண்ணையாற்றில் கற்சிலைகள்: திருக்கோவிலுார் அருகே பரபரப்பு
ADDED : செப் 13, 2025 09:14 AM

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை தென்பெண்ணையாற்று தரைபாலம் அருகே கருங்கல் சிலைகள் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டை தென்பெண்ணையாற்று, பழைய தரைப்பாலம் பகுதியில் நேற்று காலை ஏராளமான கற்சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில், ஆஞ்சநேயர் சிலை மற்றும் சிவன் கோவில்களில் இருக்கும் லிங்கோத்பவர், நந்தி, முருகர், வள்ளி, நவகிரகங்களில் சூரியன், குரு, மூன்று நாகர் சிலைகள், அம்மன் சிலை என 20க்கும் மேற்பட்ட சிலைகள் இருந்தது.
கோவில்களில் வழிபாட்டில் சிலைகள் இருந்ததிற்கான தடயங்கள் காணப்படும் நிலையில், புதிதாக கோவில் கட்டிய நிலையில், பழைய சிலைகளை அகற்றி ஆற்றில் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம். தனிநபர்கள் வீடு கட்டுவதிற்கு தரையை தோண்டியபோது சிலை கிடைத்திருக்கலாம். இத்தகவல் வெளியே தெரிந்தால் வீடு கட்டும் இடத்தில் பிரச்னை வரும் என கருதி சிலைகளை ஆற்றில் வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தகவல் பரவியது. வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆய்வாளர்களின் முழுமையான ஆய்வுக்கு பிறகு சிலைகளின் காலம் மற்றும் அதன் தொன்மை தெரிய வரும் தெரிவிக்கப்பட்டது.