/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் போட்டியிட உடன்பிறப்புகள் பலப்பரீட்சை
/
கள்ளக்குறிச்சியில் போட்டியிட உடன்பிறப்புகள் பலப்பரீட்சை
கள்ளக்குறிச்சியில் போட்டியிட உடன்பிறப்புகள் பலப்பரீட்சை
கள்ளக்குறிச்சியில் போட்டியிட உடன்பிறப்புகள் பலப்பரீட்சை
ADDED : மார் 12, 2024 06:20 AM
தியாகதுருகம், : கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட் பெறுவதற்கு தி.மு.க., பிரமுகர்கள் மத்தியில் போட்டோ போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் தி.மு.க.,வே போட்டியிடும் என தெரிகிறது. இது, உடன்பிறப்புகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டிங் எம்.பி., கவுதம சிகாமணி, கடந்த 5 ஆண்டுகளில் மக்களை அதிகம் சந்திக்காததால் அவர் மீது அதிருப்தி உள்ளது.
தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு, இங்கு பிரேமலதா போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக நிறுத்தப்பட்ட மணிமாறன், தனக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளதாக கூறி தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சீட் கேட்கிறார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளரான மலையரசனும் 'சீட்' பெறுவதற்கு மிகுந்த முயற்சி எடுத்து வருகிறார். இத்தொகுதியில் சீட் பெற தி.மு.க.,வில் பலத்த போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

