/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு
/
ரிஷிவந்தியம் தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு
ரிஷிவந்தியம் தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு
ரிஷிவந்தியம் தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு
ADDED : டிச 15, 2025 06:00 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிலரங்கம் மணலுார்பேட்டையில் நடந்தது.
பா.ஜ., மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், ஒன்றிய தலைவர்கள் மணிகண்டன், சின்னதுரை, வெள்ளைக்காரன், மதியழகன், முருகன் முன்னி லை வகித்தனர். ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய தலைவர் பார்த்திபன் வரவேற்றார். பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் சிறப்புரையாற்றினர்.
சட்டசபை தேர்தல் பணிகள், அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், திண்ணை பிரச்சாரம் மூலம் மத்திய அரசு சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லுதல், தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகளை குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் துரைவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சிவலிங்கம், மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், ஜோதிநாதன், ராஜசுந்தரம், ரவி, ஏழுமலை, குழந்தைவேல், ராசையா, ஒன்றிய நிர்வாகிகள் பாவாடை, சேகர், முத்துராமன், ஹேமநாத், ஜெயராமன், ரஞ்சித், அஜித்குமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயதுரை நன்றி கூறினார்.

