/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குன்றுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
குன்றுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : டிச 20, 2025 07:06 AM

கள்ளக்குறிச்சி: குன்றுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர்கள் மனு அளித்தனர்.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் சங்கராபும் அடுத்த பொய்க்குணத்தை சேர்ந்த இளைஞர்கள் அளித்த மனுவில்;
சங்கராபுரம் அருகே பொய்க்குணம் மற்றும் ச.செல்லம்பட்டு கிராம எல்லையில் இரண்டு பெரிய குன்றுகள் உள்ளன. தனி நபர்கள் சிலர் குன்று மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். மேலும், அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றி, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் செம்மண்ணை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதுடன், இயற்கை வளம் அழிந்து வருகிறது. எனவே, குன்றுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், செம்மண் கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

