/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ் கல்லுாரியில் ஆளுமை திறன் கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ் கல்லுாரியில் ஆளுமை திறன் கருத்தரங்கம்
ADDED : ஜூலை 27, 2025 03:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆளுமை திறன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி டீன் அசோக் தலைமை தாங்கினார். அனந்தராமன் முன்னிலை வகித்தார். வணிக மேலாண்மை துறை தலைவர் ராஜா வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் தன்னம்பிக்கை, பேச்சாற்றல், தலைமை பண்பு உள்ளிட்ட ஆளுமைத்திறன்களை வளர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராஜேஷ்வரி, செல்வராணி, கோமதி, தீபா செய்திருந்தனர். உதவி பேராசிரிய சுபாஷினி நன்றி கூறினார்.

