/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர் தினவிழா
/
கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர் தினவிழா
ADDED : டிச 23, 2025 07:10 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மத்திய, மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தினவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி வாசவி பவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். உதயகுமார், ஆதி அண்ணாமலை, வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாமோகன் தொடக்கவுரை வழங்கினார்.
அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். செயலாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் அருளப்பன், இணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், ஜெயப்பிரகாஷ், சுப்ரமணியன், ராஜூ, மாசிலாமணி உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். அகவிலைப்படியை மத்திய அரசு வழங்கும் காலத்திலேயே வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்காமல் முடக்கி வைக்கப்பட்டள்ள அகவிலைப்படியை முழுவதுமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொருளார் பாஸ்கரன் நன்றி கூறினார்.

