/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு
/
சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு
சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு
சங்கராபுரத்தில் தேசிய லோக் அதாலத்; ரூ. 1.79 கோடிக்கு சமரச தீர்வு
ADDED : டிச 15, 2025 05:50 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 120 வழக்குகள், முடிக்கப்பட்டு ரூ.1.79 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம், நீதித்துறை நடுவர் ஆதியான் ஆகியோர் 120 வழக்குகளை சமரசமாக முடித்து ரூ. 1 கோடியே 79 லட்சத்து 77 ஆயிரத்து 790 வசூலித்து உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய தம்பதியினர் நீதிபதிகளின் ஆலோசனைப்படி சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த காசோலை வழக்குகள், குடும்ப தகராறு, விபத்து இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஒரே நாளில் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கராபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவி, செயலாளர் ராமசாமி, அரசு வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.