/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லோக் அதாலத்தில் ரூ. 2.51 கோடிக்கு தீர்வு
/
லோக் அதாலத்தில் ரூ. 2.51 கோடிக்கு தீர்வு
ADDED : டிச 15, 2025 05:30 AM

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தில், 272 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
உளுந்துார்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தலைமை தாங்கி னார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மதுமிதா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கோமதி, அஜித்சிங்ராஜா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இலக்கியா, இலவச சட்ட உதவி குழு வழக்கறிஞர் வெங்கடேசன், வழக்கறிஞர்கள், வட்ட சட்டப்பணிகள் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன விபத்துக்கள், சிவில் வழக்குகள், குடும்ப வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி வழக்குகள் என 272 வழக்குகளுக்கு ரூ. 2 கோடியே 51 லட்சத்து 84 ஆயிரத்து 812 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

