/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கல்
/
ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கல்
ADDED : ஜன 02, 2024 05:39 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் அயோத்தி ராஜஜென்ம பூமி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணி துவங்கியது.
அயோத்தி ராமஜென்ம பூமியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் இதற்கான அழைப்பிதழ்கள் ராமர் படம், அட்சதை அரிசி ஆகியவற்றுடன் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனை அந்தந்த பகுதிகளுக்கென பிரித்து வழங்கப்பட்ட நிலையில் அதனை கோவில்களில் வைத்து பூஜை செய்த பின்னர் தங்கள் பகுதிகளில் வீடுகள் தோறும் வழங்கி வருகின்றனர்.
சின்னசேலம் நகரில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கும் பணி நேற்று துவங்கியது. பா.ஜ., மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலர் சுரேஷ், நகர தலைவர் ராஜேந்திரன், பா.ஜ., ஒன்றிய தலைவர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜா, பொருளாளர் சம்பத் உள்ளிட் நிர்வாகிகள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

